உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசியலமைப்புத் திருத்தங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வரலாற்றுப் பங்கு உண்டு.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
59 பார்வைகள்

இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றில் கொண்டுவரப்பட்ட முற்போக்கான திருத்தங்களுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாரிய பங்கும் பங்களிப்பும் ஒளிந்துள்ளதாகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள ‘சட்டத்தரணிகள் அமைப்பின்’ அறிமுக நிகழ்வும் கலந்தரையாடலும் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை மூன் வில்லேஜ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,
“இலங்கை அரசியலமைப்பு முறைமைகள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒரு அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வழியேதான் எமது கட்சியின் எழுச்சியும் வரலாறும் ஆரம்பமானது.

அதனையடுத்துக் கொண்டுவரப்பட்ட 15 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தேர்தல் வரம்பு 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டமையினால், வன்முறைப் பாதையிலிருந்து சிறுபான்மை இளைஞர்கள் விலகி அரசியல் வழியில் பிரவேசிக்க முடிந்தது. இதனாலேயே சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்தது.

அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு வழிவகுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்த பெருமை எமது கட்சியின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமையே சாரும். இவ்வாறு 13, 15, 17 போன்ற ஒற்றைப்படை எண்களைக் கொண்ட திருத்தங்கள் அனைத்தும் நாட்டுக்கு நன்மையளித்த முற்போக்கான திருத்தங்களாகும்” எனச் சுட்டிக்காட்டினார்.

“இன்று நீதிமன்றங்களில் எமது இளம் முஸ்லிம் சட்டத்தரணிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகத் திறமையாக வாதாடுவதைக் கண்டு பெருமையடைகின்றேன். தொழில்முறைத் தேவை கருதி சட்டத்தரணிகள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

சமூகம் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், உயர் நீதிமன்றம் வரை சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள இச் சட்டத்தரணிகள் அமைப்பு காலத்தின் மிக முக்கியமான தேவையாகும்” என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷாரப், கட்சி அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பெருந்திரளான சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0