உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
60 பார்வைகள்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதுடன் நிதி ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் செயற்திட்டப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அவற்றின் சாதகமான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி பொருளாதாரக் காரணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், நாணய நிதியத்தின் செயற்றிட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்மறையான கருத்துக்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படவுள்ளன. குறிப்பாக பெறுமதி சேர் வரி மற்றும் உழைக்கும்போது செலுத்தப்படும் வரிகள் கட்டம் கட்டமாகக் குறைக்கப்படும். அதற்குரிய யோசனைகள் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்.

நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலத்தில் அரசியல் ரீதியில் பிரபல்யமடையும் வகையிலான மக்கள் விரோதத் தீர்மானங்களை அரசு எடுக்கவில்லை. பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு அரச நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்றோம். பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கப்போவதில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0