சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
பாரவூர்தி மற்றும் கப் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று காலை 7 மணிக்கு ஹட்டன் பகுதியில் உள்ள புளியாவத்தை வீதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கப் ரக வாகன சாரதி படுகாயம் அடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மொனராகலை பகுதிக்கு மணல் ஏற்ற சென்ற டிப்பர் ரக பாரவூர்தி முன்னால் வந்த பால் சேகரிக்க சென்ற கப் ரக வாகனத்தின் முன் பகுதியில் மோதியதில் கப் ரக வாகன சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டது. ஹட்டன் போக்குவரத்து பொலிசார் விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
விபத்து சம்பந்தமாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

