உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடுத்த அரசும் அநுரவினுடையதே.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
108 பார்வைகள்

அடுத்த அரசும் தேசிய மக்கள் சக்தி அரசாகவே இருக்கும் என்பதையும், அநுரகுமார திஸாநாயக்கவே நாட்டின் ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் இருப்பார் என்பதையும் மக்கள் தற்போது உறுதிப்படுத்தி வருகின்றனர் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“ஜனநாயக முறைப்படி நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடத் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. திருட்டு, மோசடி மற்றும் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்கள் போதாது எனின், புதிய நீதிமன்றங்களையும் சட்டங்களையும் உருவாக்கிக் கொள்ளையர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், அதற்கேற்ப நாட்டில் முழுமையான விலை அதிகரிப்பை அரசு மேற்கொள்ளவில்லை.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்பை ஈடுசெய்து மக்கள் மீது சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக மேலதிகமாக 41 ஆயிரம் மில்லியன் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் முறையே சுமார் 140 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை இருந்தும், முச்சக்கரவண்டி, பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு இந்தச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்திய யுத்தத்தால் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விலைகளில் தாக்கம் ஏற்பட்டாலும், நாட்டு மக்களுக்குப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் சந்தையில் கிடைப்பதை உறுதிப்படுத்த இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் புத்தகங்கள் மீதான வரி மற்றும் பணப் பரிமாற்றத்துக்கான வரிச் சலுகைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0