உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

24 மணித்தியாலங்களில் நால்வர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
126 பார்வைகள்

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை, தர்மபால மாவத்தையில் கல்முனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில், உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹபரணை – திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

ஹபரணையில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கு, தியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹொரணையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்ற பேருந்துடன் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்து கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும், 16 வயதுடைய யுவதியுமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0