உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாண் விற்பனை நிலையங்களில் விசேட சோதனை நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
100 பார்வைகள்

நிர்ணயிக்கப்பட்ட எடையற்ற பாண்களை விற்பனை செய்தல் மற்றும் விலையைச் சரியாகக் காட்சிப்படுத்தாமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகளும் சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 29 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது 107 கடைகளும், பேக்கரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, குறைந்த எடைகொண்ட பாண் விற்பனை தொடர்பாக 35 சம்பவங்களும், அதன் எடையைக் காட்சிப்படுத்தாமை தொடர்பாக 85 இடங்களும், விலையைக் காட்சிப்படுத்தாத 55 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்தச் சோதனைகளின் போது 71 பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

குறைந்த எடைகொண்ட பாண் கண்டறியப்பட்ட சந்தர்ப்பங்களில், சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமன்றி, அதனை உற்பத்தி செய்த பேக்கரி வரையிலும் விசாரணைகளை விரிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்போது பேக்கரியிலுள்ள பாணின் எடையும் பரிசோதிக்கப்பட்டு, குற்றம் உறுதிசெய்யப்படுமாயின் உற்பத்திச் செயல்முறையை உடனடியாகச் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், போதுமான சான்றுகள் உள்ள பட்சத்தில் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் செப்டம்பர் 01 முதல் 03 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 118 கடைகளும் பேக்கரிகளும் பரிசோதிக்கப்பட்டு, குறைந்த எடைகொண்ட பாண் தொடர்பான 54 சம்பவங்கள் கண்டறியப்பட்டிருந்தன.

இதற்கமைய, இந்த இரு திட்டங்களின் கீழும் ஒட்டுமொத்தமாக 225 கடைகளும் பேக்கரிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த எடைகொண்ட பாண் தொடர்பான 89 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

40 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0