உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனை மீட்க சவூதி செல்லும் இலங்கை தூதுக்குழு

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
88 பார்வைகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவுக்குப் புறப்படவுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவே இதற்காகப் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சவூதி அரேபியாவிலுள்ள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி சரியான முறையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். 

பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னூட்டமொன்றின் மூலம் மத நிந்தனை செய்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினாலேயே சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 

அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்காக இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

40 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0