உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ்.பொது மலசலகூட விவகாரம் – இருதரப்பும் பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
120 பார்வைகள்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு, யாழ் மாநகர சபையும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையும் சுமூகமான இணக்கப்பாட்டுக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடன் மாநகர சபையின் மாதாந்த அமர்வின் தொடர்பிலான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஒன்று இன்று (4)  கட்சியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினை குறித்து இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்கு நாளாந்தம் பெருமளவான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள், வர்த்தக நடவடிக்கைகளுக்காக நகருக்கு வரும் பொதுமக்கள், மருத்துவத் தேவைக்காக வருபவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்க  வேண்டிய நீண்டகால தேவை காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த எமது ஆட்சிக்காலத்தில் அமைவிடம் மற்றும் நிதி மூலம் என்பன  உறுதிசெய்யப்பட்டு இத்திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டு யாழ் மாநகரசபை மற்றும் இ.போ.சா ஆகிய இருதரப்பு இணக்கப்பாட்டுடன் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

பொதுமக்களின் தேவையை கருத்திற்கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது மலசலகூடம் இதுவரை  பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். 

மக்களுகளின் தேவைக்காக நிர்மாணிக்கப்பட்ட பின்னரும், நிர்வாக ரீதியான அல்லது உரிமை சார்ந்த பிரச்சினைகள் காரணமாக அது பயன்படுத்தப்படாமல் இருப்பது அந்த வசதியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் யாழ் மாநகர சபையும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலையும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தகது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

159 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0