உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வேலணை மத்திய கல்லூரிக்கு அருகே விசமிகளால் தீ மூட்டல் – மைதானத்தின் பெருமளவு தாவரங்கள் எரிந்து நாசம்!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
94 பார்வைகள்

வேலணை மத்திய கல்லூரி மைதானத்தின் கிழக்குப் பகுதியில் விசமிகளால் திட்டமிட்டு தீ மூட்டப்பட்டதில், அப்பகுதியில் காணப்பட்ட நிழல்தரும் மரங்கள், புற்றரைகள் உள்ளிட்ட தாவரங்கள் தீக்கிரையாகியுள்ளன.

வேலணைப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வயல்கள், புற்றரைகள், பனங்கூடல்கள் உள்ளிட்ட பல நூறு ஏக்கர் நிலப்பரப்புகள் விசமிகளால் தொடர்ச்சியாக தீ மூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. 

இதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மட்டுமன்றி, பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

விசமிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த தீ மூட்டல் சம்பவங்களைத் தடுப்பதற்காக வேலணை பிரதேச சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக கடந்த மாதம் இடம்பெற்ற தீ மூட்டல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் மூட்டப்பட்ட தீ, காற்றின் காரணமாக வேகமாகப் பரவி, மைதானத்தின் கிழக்குப் பகுதியை பெருமளவில் பாதித்தது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகத்தால் வேலணை பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபையின் நீர் பவுசர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், தனியார் ஒருவரின் நீர் பவுசரும் வரவழைக்கப்பட்டு, இரண்டு பவுசர்கள் மூலம் நீர் பாய்ச்சி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான திட்டமிட்ட தீ மூட்டல்களைத் தடுத்து, சுற்றுச்சூழலையும் அப்பகுதியில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க உரிய தரப்பினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

40 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0