ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்வரும் 18 ஆம் திகதி பதுளைக்கு விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி பதுளை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் அணி மாநாடு அன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு பதுளை சேனாநாயக்க மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பிரதமரின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.