உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தித் திட்டங்களை குப்பைத் தொட்டியில் வீசும் என்.பி.பி. அரசு!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
93 பார்வைகள்

சூரிய சக்தி தொழில்முனைவோரை இல்லாதொழிக்கும் நோக்கில் தற்போதைய அரசு எடுத்துள்ள கொள்கைத் தீர்மானங்கள் குறித்து இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் மேத்யூ டக்வொர்த்துக்குத் தெளிவுபடுத்துவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய சக்தித் திட்டங்கள் ஊடாக ஆயிரக்கணக்கான நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டனர். ஆனால், இன்று பணபலம் மற்றும் அரசியல் தொடர்புகள் அற்ற இத்துறைசார் தொழில்முனைவோரின் திறனை முடக்கும் அரச கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மாதந்தோறும் 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை நாட்டுக்குச் சேமிக்கும் கூரைமேல் சூரிய சக்தி அமைப்புகளை வலுப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, அரசு கோடிக்கணக்கான ரூபாவைத் தோல்வியடைந்த ஒருங்கிணைந்த மின்நிலையங்களில் முதலீடு செய்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யுகதனவி, சஹஸ்தனவி, சொபாதனவி போன்ற திட்டங்கள் ஊடாக எல்.என்.ஜி. அலகைக் கூட உற்பத்தி செய்யாமல் பொய் விலைகளைக் குறிப்பிடுவதாகவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துவிட்டு அனல் மின்நிலைய மாபியாவை அரசு வலுப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் சூரிய சக்தி அலகு ஒன்றுக்கான விலை 37 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், அதனை படிப்படியாக 27 ரூபாவாகவும் தற்போது 20 ரூபாவுக்கும் குறைவாகவும் குறைத்து, நெட் பிளஸ் முறையின் மூலம் தொழில்முனைவோரை முதலீட்டிலிருந்து விலகும் சூழலை அரசு உருவாக்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆஸ்திரேலியா மற்றும் நோர்வே போன்ற நாடுகளிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, உலகளாவிய போர்ச் சூழ்நிலைகளுக்கு மத்தியில் எரிபொருள் மற்றும் அனல் மின்நிலையங்களை நம்பியிராமல் தொடர்ச்சியான, குறைந்த செலவிலான புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை ஊக்குவிக்க வேண்டும் என்றும்  தெரிவித்த அவர், அத்தகைய எந்தவொரு வேலைத்திட்டத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி எமது உச்சபட்ச ஆதரவை வழங்கும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

40 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0