லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை!
ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையை உயர்த்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள எரிவாயு கொள்கலன்களின் விலைகளே தொடர்ந்து செல்லுபடியாகும்.
இதனடிப்படையில், 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 4,365 ரூபாயாகவும், 5 கிலோகிராம் கொள்கலனின் விலை 1,750 ரூபாயாகவும், 2.3 கிலோகிராம் கொள்கலனின் விலை 815 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.