உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  நீக்குவதாகக் கூறி அதைவிடக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர முயல்வது வஞ்சகமானது!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
102 பார்வைகள்

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மக்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

ஆனந்தபுரம் வட்டார கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலுள்ள இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்.

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்பு இச்சட்டத்தை நீக்க ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட போதிலும், ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் இச்சட்டம் நீக்கப்படவிலை; அரசியல் தீர்வு குறித்தும் அமைதி காத்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், பொலிஸாருக்கு மட்டுமின்றி இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும் (CSD) சந்தேக நபர்களைக் கைது செய்யவும், விசாரணையின்றித் தடுப்பில் வைக்கவும் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன.

இச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்படுகின்றன; யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நினைவேந்தல் சுடரேற்றிய பள்ளி மாணவர்கள் உட்பட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு நிபந்தனை விதித்துள்ள போதிலும், அரசு அதைவிடக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர முயல்வது வஞ்சகமான செயலாகும்.

இப்புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்வதாக உரையாற்றியவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0