உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுவரெலியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுத்தைகளின் அச்சுறுத்தல்!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
111 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சிறுத்தைகளின்  அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அன்மை காலங்களில் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.

கடந்த சில காலமாக சிறுத்தைகளின் கடிக்கு உள்ளான நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான லொனக், வட்டவளை மீனாட்சி தோட்டம், வட்டவளை பகுதியில் உள்ள அனைத்து தோட்டங்களில் உள்ள பற்றை பகுதிகளில் அதிக அளவில் சிறுத்தைகள் மற்றும் புலி நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் தோட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

உடனே கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கா விடின் எதிர் காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுவதுடன் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0