உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2029 ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எண்மரின் பெயர்கள் பரிந்துரை!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
87 பார்வைகள்

வரவிருக்கும் 2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக 8 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன என்று அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாகப் போட்டியிடும். தற்போது வெளிநாட்டில் உள்ள சிலரின் பெயர்கள் உட்பட மொத்தம் 8 பேரின் பெயர்கள் எமது பரிசீலனையில் உள்ளன. எனவே, கிராமிய மட்டத்தில் உள்ள சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கட்சியை வலுப்படுத்தத் தயாராக வேண்டும்.

கட்சியை மறுசீரமைத்துக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும். பிற கட்சிகளின் தோளில் தொங்கி அரசியல் செய்ய வேண்டிய தேவைப்பாடு எமது கட்சிக்குக் கிடையாது.

எனினும், ஒரு பொதுவான கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும் எதிரணி தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், அது குறித்தும் அன்றைய கள நிலவரத்துக்கு ஏற்பப் பரிசீலிக்கலாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0