உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர அரசுடன் எமக்கு எந்தவித அரசியல் உடன்பாடும் கிடையாது! : ஹர்ஷன ராஜகருண எம்.பி தெரிவிப்பு

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
84 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித அரசியல் உடன்பாடும் (டீல்) கிடையாது எனத் தெரிவித்த அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண, பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பைத் தம்மால் இயன்றளவு சரியாக நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் இன்று வந்துவிட்டனர். பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி தம்மால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்து வருகின்றது.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் உட்பட அனைத்து விடயங்களிலும் நாம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளோம்.

இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை ரீதியில் சவால் கொடுப்பது கடினமாகும். எனினும், இணைந்து பயணிக்கக் கூடிய விடயங்களில் அனைத்து எதிரணிகளுடனும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றோம். அதற்காகத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை.

நாம் இந்த அரசுக்கு அஞ்சவில்லை. அரசுடன் எங்களுக்கு எந்தவிதமான ‘டீலும்’ இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றுவோம். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்காலத்தில் ஒன்றிணையும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0