உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசின் புதிய பயங்கரவாதச் சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் தொடக்கம் பரந்துபட்ட மக்கள் பிரசாரம் : சுமந்திரன் அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
109 பார்வைகள்

அரசால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவிருப்பதாக சர்வஜன நீதி அமைப்பின் பிரதிநிதி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில், பயங்கரவாதம் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதுடன் சந்தேகநபரைத் தேடுதல், கைது செய்தல் என்பன தொடர்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களும் ஆயுதமேந்திய படையினருக்கும் உரித்தாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஊடகங்ககுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள், “பயங்கரவாதத்தடைச்சட்டமோ அல்லது அதனைப் பதிலீடு செய்யும் வகையில் அரசால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமோ ஜனநாயக நாடொன்றுக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மாறாக இது பெரும் அடக்குமுறையின் ஓர் ஆரம்பப்புள்ளியாகவே அமையும்” என்று சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமாத்திரமன்றி கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் ஆணையைப் பெற்ற தற்போதைய அரசு, புதிய சட்டங்கள் மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்குத் தவறுவது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவிருப்பதாக சர்வஜன நீதி அமைப்பின் பிரதிநிதி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தற்போது ஆட்சிப்பீடத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசு, கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாட்டை மீள நினைவுறுத்திய சுமந்திரன், இப்போது அதற்கு முற்றிலும் முரணான விதத்தில் செயற்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகத் தாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த விழிப்புணர்வுப் பிரசாரங்களில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பங்கேற்பு, புதிய சட்டமூலத்தின் ஆபத்து உள்ளிட்ட விடயங்களைத் தெளிவுபடுத்தி சர்வஜன நீதி அமைப்பின் ஊடாக அடுத்த வாரத்திலிருந்து பரந்துபட்ட மக்கள் பிரசாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 48…

46 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குக.!

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மழை அதிகரிப்பு.!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டிலும் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற…

68 0 0
இலங்கை செய்திகள்

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில்…

89 0 0