காட்டு யானை தாக்கி வயோதிபர் உயி@ரிழப்பு!
சிகிரிய பொலிஸ் பிரிவுக்ட்பட்ட பலுடாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபராவார்.
உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.