உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இனவாதம், மதவாதத்தை தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற சதி.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
77 பார்வைகள்

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று இந்த நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இனங்களுக்கு இடையே பாரிய மோதல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது. இந்நாட்டில் உள்ள சில நபர்களுக்கு சர்வதேசத்திலிருந்து கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்.

இதன் அடிப்படையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தைச் சேர்ந்த மக்களும் இதில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இனம், மதம் அல்லது வேறு விடயங்களைச் சார்ந்து குழப்பங்களை ஏற்படுத்த முனையும் சக்திகளுக்கு முகநூல் (Facebook) அல்லது யூடியூப் (YouTube) போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தூண்டலை ஏற்படுத்தி நாம் பலிகடாவாகிவிடக் கூடாது.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நாம் அனைவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டும். கடந்த காலங்களிலும் நாட்டில் பாரிய அசம்பாவிதங்களையும் இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்கப் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. இருப்பினும், அரசாங்கம் சில விடயங்களை மிக நுணுக்கமாகவும் அவதானமாகவும் கையாண்டதன் நிமித்தமே அந்தப் ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டுச் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அரசியல்வாதிகளாக இருக்கலாம், யூடியூபர்களாக இருக்கலாம், முகநூல் வாயிலாகக் கருத்துப் பரப்புபவர்களாக இருக்கலாம் அல்லது வெளிநாடுகளிலிருந்து இயங்குபவர்களாக இருக்கலாம் இவர்கள் அனைவரும் எங்களைச் சுயநல அரசியல் தேவைகளுக்காகப் பலிகடாவாக்கப் பார்க்கிறார்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி, அதில் குளிர்காய நினைக்கிறார்கள்” எனச் சுட்டிக்காட்டினார்.

“இவ்வாறான சதி முயற்சிகளுக்கு நாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமாயின், நாட்டின் மூன்று பிரதான இன மக்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாகக் கைக்கோர்க்க வேண்டும். மக்களைத் தூண்டிவிட்டுத் தங்களின் சுயநல அரசியலை அறுவடை செய்யத் துடிக்கும் சக்திகளுக்குத் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் இணைந்து சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இங்கு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி உடையில் கை வைத்து தவறிழைத்துள்ளது அநுர அரசு : சஜித் விமர்சனம்!

“தற்போது பல்வேறு வழிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத வேறுபாடு, மதவாதம், இன வேறுபாடு மற்றும் இனவாதம் என்பன ஒரு புற்றுநோயாகும். இந்தப்…

70 0 0
இலங்கை செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபானசாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை தடுக்கம்கோரிய தீர்மானம் வலி வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று(15) இடம்பெற்ற சபை அமர்வில் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

43 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

54 0 0