உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களிடம் இருந்து நிதியைச் சுரண்டுகின்றது அநுர அரசு.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
80 பார்வைகள்

அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் கப்பலிலிருந்து இறக்கப்படும் அதே குறைந்த விலைக்கு மக்களுக்கு எரிபொருளை வழங்குவோம் என்றும், விலை சூத்திரங்களை அகற்றி வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவோம் என்றும் வாக்குறுதி அளித்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று மக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் நிதியைச் சுரண்டி வருகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலக நிலவரங்களையும் பிராந்திய மோதல்களையும் காரணம் காட்டி, கையிருப்பில் உள்ள பழைய எரிபொருள் இருப்புகளுக்கு அரசு தன்னிச்சையாக விலையை உயர்த்தியுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் அரசும் இணைந்து வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதற்கு வழிவகுத்து, மக்களிடம் இருந்து மறைமுகமாகப் பணத்தைப் பறித்து வருகின்றன.

மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையை உயர்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பெருந்தொகையை மானியமாக வழங்குவதாக அரசு போலி மாயையைத் தோற்றுவிக்கின்றது. ஆனால், மக்களின் கைகளிலிருந்து வரிகள் மூலம் பெறப்பட்ட நிதியையே மீண்டும் மானியம் என்ற பெயரில் காட்டி, மக்கள் மீது இரட்டைச் சுமையைச் சுமத்துகின்றது.

நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்ற கோடிக்கணக்கான ஊழல்கள் மற்றும் முறைகேடான ஒப்பந்தங்களால் ஏற்பட்ட பெரும் நிதி இழப்புக்களை மூடிமறைக்கவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கவுமே இவ்வாறான சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன.

முறையான விலை ஒழுங்குமுறை குழுவொன்றை நியமிக்காமல், தன்னிச்சையான கடிதங்கள் மூலம் சட்டவிரோதமாக விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவதாகப் பேசிய தலைவர்கள், தற்போது மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, அரசு உடனடியாக இத்தகைய மறைமுக சுரண்டல்களை நிறுத்திவிட்டு, வெளிப்படைத்தன்மையான விலைச்சூத்திரத்தை அமுல்படுத்துவதுடன், சுமையற்ற வகையில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0