உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்து வருவது நாட்டுக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் : சஜித் எச்சரிக்கை!!

83 பார்வைகள்

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும் நாட்டில் உயர் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மிக அவசியமானவை எனவும், எனினும் நாட்டின் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்து வருவது பாரிய பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தரவுகளைச் சுட்டிக்காட்டியே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2025 ஆம் ஆண்டில் இலங்கையின் நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகையுடன் ஒப்பிடும்போது, பங்களாதேஷுக்கு 1.7 மடங்கும், பாகிஸ்தானுக்கு 1.8 மடங்கும், மலேசியாவுக்கு 14.7 மடங்கும், தாய்லாந்துக்கு 18.3 மடங்கும், வியட்நாமுக்கு 19.5 மடங்கும், இந்தோனேசியாவுக்கு 20.5 மடங்கும் மற்றும் இந்தியாவுக்கு 37.3 மடங்கும் முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நமது நாட்டின் முதலீட்டு நிலை பலவீனமான மட்டத்தில் உள்ளமை தெளிவாகின்றது.

சட்ட ரீதியான நிச்சயமற்ற தன்மைகள், திட்டங்களைச் செயற்படுத்துவதில் உரிய அவசரப் பதிலளிப்புகள் கிடைக்காமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள், ஒழுங்குமுறைகளில் காணப்படும் ஸ்திரமற்ற தன்மை ஆகியவையே முதலீடுகள் குறைவடைவதற்கான காரணங்களாக விளங்குகின்றன.

நாட்டின் முதலீட்டுச் சபையானது ஒரே இடத்தில் அனைத்துச் சேவைகளையும் வழங்கும் ‘One stop shop’ என வர்ணிக்கப்பட்டாலும், உண்மை நிலையில் அது ‘One block shop’ முறையாகவே காணப்படுகின்றது.

முதலீட்டுச் சபையானது முதலீடுகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாகத் தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது. இதனால் நாட்டின் கவர்ந்திழுக்கும் தன்மை இழக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உள்நாட்டு மோதல்கள் மற்றும் மத்திய கிழக்குப் போர் நிலவிய சவாலான காலகட்டத்தில்கூட, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தார். அதிகாரிகள் வாதங்களை ஒதுக்கிவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.

எனவே, இந்தப் பிரச்சினைகளுக்குத் உடனடியாகத் தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி தலைமையில் துரித செயலணி ஒன்றை நியமித்து, முதலீடுகளைக் கவருவதற்கான அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0