உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திலீபனை நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு!

91 பார்வைகள்

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் இடம்பெற்றுவந்த மூன்று நாள் தொடர் ‘அணையா விளக்கு – அமைதி வழிப் போராட்டம்’ இன்று ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் மகஜர் கையளிப்போடு தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5 மணி முதல் ‘அணையா விளக்கு – அமைதி வழிப் போராட்டம்’ ஆரம்பமானது. நினைவுத்தூபிக்கு முன்னால் சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அணையாமல் பாதுகாக்கப்பட்ட நிலையில், 3ஆம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவிலும், மாலை 5 மணியளவிலும் தியாக தீபத்தின் நினைவுத்தூபியில் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனை நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டுர்க்கிடம் கையளிப்பதற்கான 19 பொது அமைப்புகள் அடங்கிய மகஜர் ஒன்று, யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

மேலும், மூன்று நாள் போராட்டத்தின் போது அணையாது பாதுகாக்கப்பட்ட தீபமானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பண்ணைக்கடலில் கலக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் கையளிப்பட்ட மகஜரில் உள்ளடங்கிய முக்கிய விடயங்கள் வருமாறு:-

“சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் பிரகாரம், அனைத்து மக்களுக்கும் தமது அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான சுயநிர்ணய உரிமை உண்டு. நினைவேந்தல் என்பது ஒரு சமூகத்தின் கூட்டு நினைவு, வரலாறு மற்றும் பண்பாட்டு அடையாளத்துடன் தொடர்புடைய அடிப்படை உரிமையாகும்.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் பிரிவுகள் 19, 20 மற்றும் இலங்கையும் தரப்பாக உள்ள குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் பிரிவுகள் 19, 21 என்பன கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் உரிமையையும் முழுமையாகப் பாதுகாக்கின்றன.

தியாக தீபம் திலீபனின் நினைவாலயமானது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அரச நிர்வாக நடைமுறைகளுக்கேற்பவே மீள்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை அரச நிர்வாகத்துக்குப் புறம்பானதாகக் கருத முடியாது.

நினைவேந்தல்களின் போது அச்சுறுத்தல், கண்காணிப்பு மற்றும் தேவையற்ற தலையீடுகள் இடம்பெறாத சூழலை உறுதிப்படுத்தவும், அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை அதன் நினைவாலயத்தில் மீள நிறுவுவதற்கு இலங்கை அரசை வலியுறுத்துமாறும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0