உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரான்ஸ் தூதுவருடன் சஜித் இன்று சந்திப்பு!

87 பார்வைகள்

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை எதிர்கொள்ளும் சவால்கள், சூரிய சக்தித் தொழில்முனைவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அத்துறையில் முதலீடுகளை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் உள்நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பிரான்ஸ் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் எம். பிலிப் பவுட், அரசியல் அதிகாரிகளான அனா பெலர்க், தினுஷா இலேபெரும மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையின் பங்குதாரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யும் இலக்கு உட்பட, இலங்கையின் தேசிய புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

அரச கொள்கையின்படி ‘Net Metering’ மற்றும் ‘Net Accounting’ முறையிலிருந்து ‘Net-Plus’ திட்டத்துக்கு மாறுவது குறித்துத் துறைசார் பங்குதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் சூரிய சக்தி தொழில்முனைவோருக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதோடு, முதலீடுகளின் சாத்தியக்கூறுகளையும் பாதித்துள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சூரிய சக்தியுடன் தொடர்புடைய அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் ஒழுங்குமுறைத் தடைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதோடு, முதலீடுகளுக்கு முன்னறிவிக்கக்கூடிய நிலையான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பிரான்சின் அபிவிருத்தி முகவர் நிலையமான AFD ஊடாக இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலும், பிரான்ஸ் முதலீட்டாளர்களுக்கும் இலங்கைத் தொழில்முனைவோருக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தூதுவரிடம் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க சக்தியை ஊக்குவிப்பது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக அமைய வேண்டும் என்றும், நாட்டின் இலக்குகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல அரசு, முதலீட்டாளர்கள், தொழில்முறை பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0