உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எரிபொருள் விலைச் சூத்திரத்தை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்! : மதுர விதானகே வலியுறுத்தல்!!

75 பார்வைகள்

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்திலிருந்தபோது இலங்கை ஒரு பீப்பாய் டீசலை சுமார் 286 அமெரிக்க டொலர்களுக்குக் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை நிர்ணயித்த விலைச் சூத்திரத்தை அரசு உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய கிழக்குப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, உலகின் எந்தவொரு நாடும் கொள்வனவு செய்யாத அளவுக்கு அதிக விலைக்கு இலங்கை டீசலைக் கொள்வனவு செய்துள்ளது. இது தொடர்பில் எச்.எஸ்.பி.சி. வங்கியின் தலைவர் ஹாங்காங் மாநாடொன்றில் கவலை வெளியிட்டிருந்தார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பல்களுக்குச் செலுத்தப்பட்ட தொகை, டீசல் மற்றும் பெற்றோல் கொள்வனவு விலை, துறைமுகத்தில் இறக்கப்பட்ட விலை, சுங்கக் கட்டணம், காப்புறுதி, கப்பல் கட்டணம், கையாளும் செலவு மற்றும் விநியோகஸ்தர்களுக்கான செலவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசு வெளிப்படுத்த வேண்டும்.

399 ரூபாவாக இருந்த பெற்றோல் விலை தற்போது 414 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 70 ரூபா மானியம் வழங்கப்படுகின்றது என்று கூறப்படுவதால், ஒரு லீற்றர் பெற்றோலுக்கான உண்மையான செலவு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

‘மக்கள் அரசு’ எனக் கூறிக்கொள்ளும் தற்போதைய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக முன்னர் இயங்கிய உள்நாட்டு விசாரணைப் பிரிவை மீளச் செயற்படுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0