உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரணிலின் ‘தலை’ குறிவைக்கப்பட்டதா? : சுயாதீன விசாரணை கோருகின்றார் ராஜித!

90 பார்வைகள்

“இலங்கை – இந்திய அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்தவேளை, அணிவகுப்பு மரியாதையின் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேபோன்றதொரு சம்பவம்தான் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

“பாதுகாப்புப் பிரிவினர், ஊடகவியலாளர்களைத் தாக்குகின்றனர் என்பதே கடந்த காலங்களில் குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் தற்போது ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு செய்தால் அது பயங்கரவாதச் செயல் எனக் கூறப்பட்டது. எனவே, இந்த ஊடகவியலாளரின் செயலும் அவ்வாறுதான் உள்ளது. இலங்கை ஊடகத்துறைக்கு இந்தச் சம்பவம் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரி இலக்கு வைக்கப்பட்டாரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வைக்கப்பட்ட இலக்கு தவறுதலாகப் பாதுகாப்பு அதிகாரி மீது பட்டதா? என்பது உட்பட அனைத்து விடயங்கள் பற்றியும் ஆராயப்பட வேண்டும்.

இந்தப் பாரதூரமான சம்பவத்தைப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஒரு சாதாரண சம்பவம் எனக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகின்றது என்பதையே இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0