உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோலாகலமாக ஆரம்பமான வளரும் நட்சத்திரங்கள் வெற்றிக்கிண்ண கால்பந்துத் தொடர்

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
79 பார்வைகள்

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வளரும் நட்சத்திரங்கள் வெற்றிக்கிண்ணம் – 2026 (3.0)” கால்பந்துத் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்று (01) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

சாந்திபுரத்தில் அமைந்துள்ள Grow Star’s Sports Club Ground மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து, மூன்றாவது தடவையாக நடைபெறும் இவ்வருடப் போட்டித் தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளன.

இப்போட்டித் தொடர் நேற்று முதல் எதிர்வரும் 04.10.2026 வரை நடைபெறவுள்ளதுடன், சாந்திபுரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் முக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளது.

Grow Star’s Sports Club ஏற்பாட்டில் நடைபெறும் இத்தொடருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது.!

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்த 23 மற்றும் 48…

46 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குக.!

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்…

57 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மழை அதிகரிப்பு.!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டிலும் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற…

68 0 0
இலங்கை செய்திகள்

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில்…

90 0 0