உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ராஜபக்ஷக்கள், ரணில் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
63 பார்வைகள்

நாமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் தரப்பினருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித பாகுபாடுமின்றிச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனபலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு, பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ஷ மீதான எயார்பஸ் கொள்வனவு பணமோசடி குற்றச்சாட்டில் அவருக்குப் பிணை வழங்கப்பட்ட போதிலும், ஏனைய வழக்குகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது. அதேபோன்று, ஷிரந்தி ராஜபக்ஷவுடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரைச் சுற்றியுள்ள அரசியல் குழுவினர் மீதான முறையற்ற பணப் பயன்பாடு, வெளிநாடுகளுக்குப் பணம் கொண்டு செல்லப்பட்டமை மற்றும் மத்திய வங்கி விவகாரத்துடன் தொடர்புடையவர்களைப் பாதுகாத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.

அரசியல் தரப்பின் அடிப்படையில் சட்டம் வேறுபட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படக் கூடாது. ராஜபக்ஷ குடும்பத்தினராக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றியுள்ள குழுவினராக இருந்தாலும் அல்லது வேறு எந்தத் தரப்பாக இருந்தாலும் குற்றச்சாட்டுகள் ஒரே அளவுகோலில் பரிசீலிக்கப்பட வேண்டும்.

ஒருவரைப் பாதுகாப்பதற்காகவும் மற்றொருவரைப் பழிவாங்குவதற்காகவும் சட்டம் பயன்படுத்தப்படக் கூடாது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிரூபிக்கப்படாவிட்டால் சட்டரீதியாக விடுவிக்கப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பொதுச் செல்வ இழப்புக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0