உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான ஊடகவியலாளரின் தாக்குதல் சம்பவம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
68 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது ஊடகவியலாளர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது தொடர்பில் சுயாதீனமான விசாரணையொன்றை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதிமன்ற விசாரணைக்காக வருகை தந்துவிட்டுத் திரும்பிய முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களும் இதனைக் கண்டிக்க வேண்டும்.

பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இந்தச் சம்பவத்தை ஒரு சிறிய அல்லது தற்செயலான நிகழ்வு எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அவ்வாறாயின் விசாரணைகள் எவ்வாறு முறையாக முன்னெடுக்கப்படும்?

வரலாற்றில் முதன்முறையாக ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறான தாக்குதலை நடத்தியுள்ளார் என்று நான் நினைகின்றேன்.

இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸ் திணைக்களம் சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணையை நடத்தி, இந்தத் தாக்குதலுக்கான உண்மையான காரணத்தைச் சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0