உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டில் போதுமான நிதி ஸ்திரத்தன்மை உண்டு; முதலீட்டாளர்கள் அச்சமடையத் தேவையில்லை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
85 பார்வைகள்

இலங்கையின் கடன் சுமையை நிர்வகிக்க அரசு முன்னெடுத்து வரும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நிதி ஒழுக்க நடவடிக்கைகள் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

கடன் மீளச் செலுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அல்லது முதலீட்டாளர்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை எதிர்நோக்கியுள்ள கடன் சுமைக்குத் தீர்வு காணும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைய கடன் பொறுப்புக்களை நிர்வகிக்க அரசிடம் போதுமான நிதி ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது.

உள்நாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அரசு தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், முறையான நிர்வாகத்தின் காரணமாக எதிர்காலத்தில் கடன் செலுத்துவதில் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களுக்கும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கும் இடையே எவ்வித எதிர்மறையான தாக்கமும் ஏற்படாது. நிதி ஒழுக்கமே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனையாகும்.

தனிநபர் தனியுரிமை அல்லது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சொத்து அறிவித்தல் படிவங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும். உத்தியோகபூர்வ விசாரணைகளுக்கு முன்னர் சமூக ஊடகங்கள் மூலம் அதிகாரிகளின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் என்பதால் இந்தச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பின் பொதுமக்கள் நேரடியாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் புகார் அளிக்கலாம்.

எதிர்க்கட்சிகள் இதனை மக்கள் மீது சுமத்தப்பட்ட தண்டனை என விமர்சித்தாலும், ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இது அவசியமான ஒரு மைல்கல்லாகும். இது வெறும் அரசியல் விளையாட்டு அல்ல, மாறாக நீண்டகால பலன்களைத் தரும் முயற்சியாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0