உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை நான் தாக்கவே இல்லை; ஒளிப்படக்கருவியைப் பாதுகாக்கவே கை நீட்டினேன்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
95 பார்வைகள்

கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியின் மீது ஒளிப்படக்கருவியைக் கொண்டு தாக்கிய குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சிரச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் சரித் நியோமல் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசின் 166 இலட்சம் (16.6 மில்லியன்) ரூபாய் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது செயலாளராகக் கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய வேளையில், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து மேற்படி சம்பவம் பதிவாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஏ. எச். மகேஷ் ரஞ்சன் என்பவரின் தலையில், சிரச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் சரித் நியோமல் தனது ஒளிப்படக்கருவியைக் கொண்டு தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருகிலிருந்த ஏனைய ஊடகவியலாளர்களின் ஒளிப்படக்கருவியிலும் பதிவாகியிருந்ததோடு, அந்தக் காணொளியும் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஏ. எச். மகேஷ் ரஞ்சன், பொலிஸில் முறைப்பாடு செய்தமையைத் தொடர்ந்து நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள பொலிஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கமைய, நேற்று வியாழக்கிழமை சட்டத்தரணி ஒருவருடன் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான சிரச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் சரித் நியோமலைப் பொலிஸார் கைது செய்தனர்.

மேலதிக விசாரணையின் பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது நான் தாக்குதல் நடத்தவில்லை. இந்தக் குற்றச்சாட்டைத் நான் மறுக்கின்றேன்.” – என்றார் .

அவர் மேலும் கூறுகையில்,
“நான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகின்றேன். பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்கவைப் பதிவு செய்துள்ளேன்.

நான் ஒரு கையில் ஒளிப்படக்கருவியையும் மறு கையில் கைத்தொலைபேசியையும் ஏந்தியிருந்த வேளையில் பாதுகாப்பு அதிகாரி என்னைத் தள்ளினார். அப்போது நான் கீழே விழப் போனதுடன் எனது ஒளிப்படக்கருவியும் கீழே விழவிருந்ததால் அதனைப் பிடிப்பதற்காகவே கை நீட்டினேன்.

8 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியும், பல உணர்திறன் கொண்ட பாகங்களையும் கொண்ட எனது ஒளிப்படக்கருவியால் ஒருவரைத் தாக்கியிருந்தால், அந்த உபகரணம் சேதமடைந்திருக்கும். சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0