உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

75 பார்வைகள்

2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஷிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறவுள்ள இந்தத் தொடர், ஒக்டோபர் 2ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 21ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

14 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், இந்தியா ‘ஏ’ குழுவிலும், இலங்கை ‘பி’ குழுவிலும் இடம்பெற்றுள்ளன.

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 10ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஒக்டோபர் 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

அதன்பின்னர் பாகிஸ்தானுடனான போட்டி இடம்பெறுகிறது.

இலங்கை அணி தனது உலகக் கிண்ண பயணத்தை ஒக்டோபர் 10ஆம் திகதி நமீபியாவில் தகுதிச்சுற்று மூலம் தெரிவாகும் அணியுடன் ஆரம்பிக்கிறது.

தொடர்ந்து ஒக்டோபர் 13ஆம் திகதி இங்கிலாந்தையும், 16ஆம் திகதி பங்களாதேஷையும், 20ஆம் திகதி நியூசிலாந்தையும், 22ஆம் திகதி தென்னாப்பிரிக்காவையும் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

குழுநிலையில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள், மேலும் சிறந்த நான்காவது இடத்தைப் பெறும் அணி என மொத்தம் ஏழு அணிகள் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும்.

அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 17 மற்றும் 18ஆம் திகதிகளிலும், உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி நவம்பர் 21ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகள் அமுல்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில முக்கிய விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.துடுப்பாட்டவீரர்கள் ஆட்ட நேரத்தை தேவையின்றி வீணடித்தால் கடுமையான நடவடிக்கைகள்…

72 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் போட்டி தரவரிசை : 2ஆவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய…

97 0 0
விளையாட்டுச் செய்திகள்

2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட் பதிவு இன்று முதல் ஆரம்பம்

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாக்குப்பதிவு முறையிலான (Ballot) பதிவு இன்று (1) ஆரம்பமாகிறது. தென்னாப்பிரிக்காவின் கேப்…

31 0 0