உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதியோர மீன் விற்பனையாளர்களுக்கு சம்மாந்துறை நீதிமன்றம் அபராதம் : ஒருவருக்குப் பிடியாணை!!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
88 பார்வைகள்

சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதகமான வகையில் வீதியோரங்களில் சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபட்ட 11 வியாபாரிகளுக்குத் தலா 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 1,10,000 ரூபாய் அபராதம் விதித்துச் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17.09.2026 அன்று வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 வர்த்தகர்களுக்கு எதிராகச் சுகாதார அதிகாரிகளால் ‘பி’ அறிக்கை (B Report) மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.குறித்த வழக்குச் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (01.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேரில் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிராகப் பிடிவராந்து பிறப்பித்த நீதிவான், அவருகான வழக்கினை எதிர்வரும் 17.12.2026 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை, மன்றில் ஆஜரான ஏனைய 11 மீன் வியாபாரிகளும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.விசாரணைகளின் போது   நீதிவான்   “இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பயணிக்கும் வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும், உள்ளூர் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள சந்தைப் பகுதிகளில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும்” என்றும் வியாபாரிகளுக்குத் தெளிவாக அறிவுறுத்தி உத்தரவிட்டார்.

பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, வீதியோரங்களில் மீண்டும் மீன் விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமுமின்றித் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0