உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் உப்புக்குளத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர், மற்றும் முதியோர் தின நிகழ்வு

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
102 பார்வைகள்

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் இன்று (1) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் உப்புக்குளம் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.நகுசீன் ஏற்பாட்டில், ஃபா லங்கா பவுண்டேஷன் (FAA LANKA FOUNDATION) பணிப்பாளர் M.H.M பாஹிம் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வில் விருந்தினராக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் கலந்து கொண்டார்.

மேலும் மன்னார் பொலிஸ் நிலைய பெண்கள்,சிறுவர் பிரிவு அதிகாரி உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சிறுவர்களின்  நிகழ்வுகள் இடம் பெற்றதோடு கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வின் போது மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கல்வி கற்று உயர் தரத்தில் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி  முஹமட் ரிஸா இஸ்ரதானு,2026 நடைபெற்ற G.C.E O/L பரீட்சையில் 9A பெற்ற   சித்திவிநாயகர் இந்து கல்லூரி   மாணவன் M.R.M. நியாஸ் மபாஸ்    பளு தூக்கும் போட்டியில் 2026 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தை பெற்ற அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர் J. இனாமுல் ஹஸன் ஆகிய மூவரும் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி உடையில் கை வைத்து தவறிழைத்துள்ளது அநுர அரசு : சஜித் விமர்சனம்!

“தற்போது பல்வேறு வழிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத வேறுபாடு, மதவாதம், இன வேறுபாடு மற்றும் இனவாதம் என்பன ஒரு புற்றுநோயாகும். இந்தப்…

66 0 0
இலங்கை செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபானசாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை தடுக்கம்கோரிய தீர்மானம் வலி வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று(15) இடம்பெற்ற சபை அமர்வில் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்…

38 0 0
இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

42 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

53 0 0