உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வயல் வேலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் எலிக்காய்ச்சல் அபாயம் குறித்து விழிப்புணர்வு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
76 பார்வைகள்

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் மாதம் முதல் நெல் வயல் வேலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், விவசாயிகள் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய்த் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வயல் நிலங்களில் பணிபுரியும் போது எலிக்காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால், இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளை விவசாயிகள் தவறாது மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக, தகுதியான விவசாயிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் ‘டொக்சிசைக்ளின்’ (Doxycycline) தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, விவசாயிகள் வயல் வேலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தை அணுகி, தேவையான ஆலோசனைகளுடன் அப் பாதுகாப்பு மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு விடுமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று இத் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் எவரும் இந்த அறிவிப்பை அலட்சியப்படுத்தாது, தங்களது உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்த பின்னரே வயல் வேலைகளில் ஈடுபட வேண்டும் எனச் சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0