உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நம்பிக்கையான கூட்டாளியாக இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
95 பார்வைகள்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

ரில்வின் சில்வா குழுவினருடனான சந்திப்புக்குப் பின்னர், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அவரையும் இலங்கைப் பிரதிநிதிகளையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

“நமது இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நல்லதொரு கலந்துரையாடல் நடைபெற்றது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நம்பிக்கையான கூட்டாளி என்ற முறையில், இலங்கையின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. – ஜே.வி.பி. உறவுகளை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகுப்பது மற்றும் இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதே ரில்வின் சில்வா குழுவினருடனான இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி. குழுவில் சந்திரிகா அதிகாரி (மத்திய குழு உறுப்பினர்), அபுபக்கர் ஆதம்பாவா (நாடாளுமன்ற உறுப்பினர்), கபிலன் சுந்தரமூர்த்தி (மாவட்டக் குழு உறுப்பினர்) மற்றும் கல்பனா மதுபாஷினி (சர்வதேச விவகார உறுப்பினர்) ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் ரில்வின் சில்வாவின் இரண்டாவது இந்திய விஜயம் இதுவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0