உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை மக்கள் பார்வையிடுவதற்கான படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பம்

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
92 பார்வைகள்

உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான தலைமன்னாரில் இருந்து  ராமர்  பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும்  அதற்கான வெள்ளோட்ட  நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்ட நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் குறித்த மணல் தீடை களை மக்கள் பார்வையிடுவதற்கான விசேட படகு சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (1) மாலை 4.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

 குறித்த கலந்துரையாடலில் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள்,தலைமன்னார் பங்குத்தந்தை,தலைமன்னார் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அதிகார பூர்வமாக சுற்றுலா பயணிகளுக்கான தீவுகளுக்கான படகுப் போக்குவரத்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.இதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும்  முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அதற்கமைய, குறிப்பிட்ட மணல் தீவுக்கான பயணத்தை 15ஆம் தேதி மேற்கொள்வது என்றும், அதன் பிரகாரம் குறிப்பிட்ட ஒரு படகில் 7 சுற்றுலா பயணிகள் பிரயாணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வனஜீவராசிகள் திணைக்களம் பயணிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் 140 ரூபாய் அடிப்படையில் கட்டணத்தை அறவிடுவதற்கும், குறிப்பிட்ட படகு உரிமையாளர்கள் (ஒரு படகில் 7 பேர் பிரயாணம் செய்ய முடியும்) ஒவ்வொரு சுற்றுலா பயணியிடம் இருந்து 2,500 ரூபாய் வீதம் ஒரு படகுக்கு மொத்தம் 17,500 ரூபாய் தொகையை அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, தொகுதிகள் (Package) அடிப்படையில் வேறு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முதலாவது மணல் தீவில் சுற்றுலா பயணிகள் சென்று நீச்சல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அதற்குரிய கட்டணங்கள் மேலாண்மைக் குழு மூலம் தீர்மானிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்பொழுது தீர்மானிக்கப் பட்டுள்ள 17,500 ரூபாய் கட்டணத்துடன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சொந்தமான 5 தீவுகள் வரை சென்று பார்க்க முடியும்.

மூன்றாவது தீவில் இறங்கி, அதில் தங்கி நின்று குறிப்பிட்ட நேரம் அந்த மணல் தீவினைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே,  15ஆம் திகதியைத் தொடர்ந்து படகு சேவை ஆரம்பிக்க இருப்பதால், சுற்றுலா பயணிகள் மேலாண்மைக் குழுவுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்து, மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0