நுவரெலியாவில் முன்பள்ளி சிறுவர்களை ஒன்றிணைத்து சிறுவர் தினக் கொண்டாட்டம்
நுவரெலியாவில் முன்பள்ளி சிறார்களுக்கு மலர்கள் வழங்கி சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.
நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளையும் சேர்ந்த சிறார்களை ஒன்றிணைத்து, பல்வேறு கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கூடிய உலக சிறுவர் தினக் கொண்டாட்டம் இன்று (01) நுவரெலியா விக்டோரியா பூங்காவில் அமைந்துள்ள சமாதான மரத்திற்கு அருகில் நடைபெற்றது.
இந்த சிறுவர் தினக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு முன்பள்ளி சிறாரும் அழைக்கப்பட்ட விருந்தினர்களினால் மலர்கள் வழங்கி அன்புடனும் அன்பான அரவணைப்புடனும் வரவேற்கப்பட்டனர்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முன் பள்ளிகளிலும் இன்று சிறுவர் தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றது.



