உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயரும் அபாயம்! : அமைச்சரின் கருத்தில் அம்பலம்!!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
84 பார்வைகள்

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது என்று வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலக சந்தையில் ஏற்படும் மசகு எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நிலைவரங்களுக்கு அமையவே எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பே சந்தையில் சில பொருள்களின் விலையேற்றத்துக்குக் காரணமாக அமைகின்றது.

விலை மாற்றங்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையையும் சிரமங்களையும் அரசு நன்கு உணர்ந்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையைக் கட்டுப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

சந்தையில் செயற்கையான முறையில் பொருள்களின் விலைகளை உயர்த்துவது அல்லது செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்குவது போன்ற செயற்பாடுகளைத் தடுப்பதற்கும், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்துச் சூழ்நிலையை மேலாண்மை செய்வதற்கும் உரிய பொறிமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0