உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எரிபொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் கன்னத்தில் அறைந்த அரசு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
109 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் மற்றும் சர்வதேச வயோதிபர் தினங்கள் கொண்டாடப்படும் வேளையில், தற்போதைய அரசு சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரஜைகளின் கன்னத்தில் அறைந்தால் போல் எரிபொருள் விலைகளைக் கூட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார்.

இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றவும், நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி அதிகாரங்களைப் பெறவும் தற்போதைய அரசின் பிரதிநிதிகள், துறைமுகத்தில் இறக்கப்படும் அதே விலையிலேயே எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்று பிரஸ்தாபித்தனர்.

எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து திறைசேரிக்கு வழங்கப்படும் பணம் நிறுத்தப்படும், ஊழல் மற்றும் கமிஷன் தொகைகள் ஒழிக்கப்படும் என்றனர். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் அனைத்தும் பச்சையாக மீறப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பல பில்லியன்களை ஒதுக்கி அண்மைய மாதங்களில் எரிபொருள் மானியங்களைப் பெற்றுத் தருவோம் என்று ஜனாதிபதி பிரஸ்தாபித்திருந்தார். அவ்வாறாயின், இந்தச் சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலையை ஏற்றியதன் மூலம் ஜனாதிபதி அப்பட்டமான பொய்யையே அள்ளிக் கொட்டியுள்ளார் என்பது உறுதியாகின்றது.

திறைசேரியில் பெரும் பணம் சேமிக்கப்பட்டிருந்தால், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி சாதாரண மக்களுக்கும் இயலாதவர்களுக்கும் ஏன் நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியாது?

இனிமேலாவது இந்த அப்பட்டமான பொய்யுரைக்கும் அரசியலில் இருந்து விடுபட்டு, நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறி சலுகைகளைப் பெற்றுக் கொடுக்குமாறும், பொய்யான பேச்சுக்களை நிறுத்துமாறும் அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காவி உடையில் கை வைத்து தவறிழைத்துள்ளது அநுர அரசு : சஜித் விமர்சனம்!

“தற்போது பல்வேறு வழிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத வேறுபாடு, மதவாதம், இன வேறுபாடு மற்றும் இனவாதம் என்பன ஒரு புற்றுநோயாகும். இந்தப்…

71 0 0
இலங்கை செய்திகள்

வலி வடக்கு பிரதேச சபையில் மதுபானசாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை தடுக்கம்கோரிய தீர்மானம் வலி வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று(15) இடம்பெற்ற சபை அமர்வில் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

44 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

54 0 0