உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான ஒளிப்பதிவாளரின் தாக்குதல்; பாரபட்சமற்ற விசாரணைக்கு வலியுறுத்து.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
112 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், உடனடியாகப் பாரபட்சமற்றதும் நியாயமானதுமான விசாரணையொன்றை நடத்துமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ரங்க பண்டாரநாயக்க மற்றும் பொதுச் செயலாளர் மிதுன் ஜயவர்தன ஆகியோர் இணைந்து இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒளிப்பதிவுக் கருவியால் தலையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பு அதிகாரி, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்களுக்குத் தகவல்களை அறிக்கையிடுவதற்கான ஊடகவியலாளர்களின் உரிமையும், கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பும் எவ்விதத்திலேயும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதா அல்லது ஊடகவியலாளரின் சுதந்திரமான ஊடகப் பயன்பாட்டுக்குத் தடையேற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உடனடியாகவும், பாரபட்சமற்ற முறையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் இரு தரப்பினரின் பாதுகாப்புத் தொடர்பிலும் காணப்படும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகின்றது என்றும், எந்தவொரு தரப்பையும் முன்கூட்டியே குற்றவாளியாகக் கருதாமல் உண்மையான நிலைமையை வெளிக்கொணர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

148 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

139 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0