உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வாகனங்களை நடுரோட்டில் பறித்துச் செல்லும் கொள்ளைக்கார முகவர் முறை ஒழிக்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
84 பார்வைகள்

12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் ரக கார் வாங்கும் கனவுடன் லீசிங் வசதியைப் பெற்று, தற்போதைய பொருளாதாரச் சுமை காரணமாகத் தவணைகளைச் செலுத்த முடியாமல் தவிக்கும் மக்களுக்கு, மீட்பு முகவர்கள் மூலம் நடுரோட்டில் அடிவாங்கும் நிலையும், வாகனங்களை பலவந்தமாகப் பறிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டார்.

லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் அல்லது லீசிங் தவணைகளைச் செலுத்தத் தவறினால், சட்டக் கட்டமைப்பினூடாக நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுப் பணத்தை அறவிடச் சட்டங்கள் உள்ளன. அதனை விடுத்து, சட்டத்தை மீறி ‘கோணி பில்லா’ கொள்கையின் மூலம் பலவந்தமாகவும் வன்முறைகளைப் பிரயோகித்தும் சொத்துக்களைப் பறிக்கும் அநாகரிகச் செயற்பாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்கள் இவ்வாறு பலவந்தமாக முகவர்களைப் பயன்படுத்திச் சொத்துக்களைப் பறித்துச் செல்வதை மத்திய வங்கி முறைமைப்படுத்தவில்லை.

மேலும், மக்கள் படும் சிரமங்களைப் புரிந்துகொள்ளாமல் பொலிஸாரும் இந்த முகவர்களின் பக்கத்தைச் சார்ந்து நிற்பது கண்டிக்கத்தக்கது.

கடன் பெற்றால் அதனை முறையாகச் செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தவணை செலுத்துவதில் சிக்கல் எழும்போது, கடன் இணக்கப்பாட்டை மீளமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அவற்றுக்கு இடமளிக்காமல் வாகனங்களை நடுரோட்டில் பறித்துச் செல்லும் கொள்ளைக்கார முகவர் முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0