அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு.!
“திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர் தின விழா இன்று (01) ஒலுவில் அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் பிரதி அதிபர் ஜே. வஹாப்தீன் அவர்களின் தலைமையிலும் பிரதி அதிபர் எம்.ஏ.கமறுந்நிஷாவின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் கலை, விளையாட்டு மற்றும் பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையிலான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
சிறுவர் தினம் என்பது வெறுமனே கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மட்டுப்பட்டதல்ல. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், அவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தல் மற்றும் எதிர்காலத்திற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் நாளாகவும் இத்தினம் அமைகின்றது.
அந்த வகையில், மாணவர்களின் கலைத்திறன், விளையாட்டுத்திறன் உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் சிறார்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றன.
மாணவர்களின் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் இடம்பெற்ற இச்சிறுவர் தின விழாவை பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், வலயத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.





