உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்தினால் மாத்திரமே பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
65 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக முன்னெடுத்து வருகின்ற மீன்பிடி நடவடிக்கைகளை முற்று முழுதாக நிராகரிக்கிற அல்லது நிறுத்துகின்ற செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டால் மாத்திரம் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் அல்லது அவர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பேச்சு வார்த்தைகள் எவ்விதத்திலும் வெற்றியளிக்காது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் அதிகாரி மட்டத்திலான பேச்சு என்று பல தடவைகள் போடப்பட்டிருந்த போதிலும், இன்று வரை அதற்கான எந்தவிதமான முன் ஆயத்தங்களும் நடைபெற்றதாக இல்லை.

குறிப்பாக இந்த மீனவர்களை ஏமாற்றுகின்ற அல்லது மீனவர்களின் அந்த மீன்பிடியை தொடர்ந்து இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன் பிடிக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த கூடிய வகையில் தான் அமைச்சரின் கருத்துக்கள் அண்மையில் நாங்கள் பார்க்க கூடியதாக இருந்தது.

அதிகாரி மட்டத்திலான பேச்சுவார்த்தை என்று ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டு, அது இந்திய தரப்பால் வேறொரு திகதியாக மாற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், இன்று வரை அதற்கான எந்தவிதமான முன் ஆயத்தங்கள், அதற்கான திகதி நிர்ணயிக்கப்படாமல் கால நீடிப்பாக இது இழுத்துச் செல்லப்படுகின்றது.

நாங்கள் எதிர்பார்க்கும் பேச்சுவார்த்தை என்பது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி வந்து மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடியை முற்று முழுதாக நிராகரிக்கிற அல்லது நிறுத்துகின்ற செயற்பாட்டில் அவர்கள் உடன்பட்டாலே ஒழிய அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது என்பது எமது கருத்தாகும்.

இருந்தபோதிலும், ஒரு சுமூகமான நிலையை எட்டுவதற்கு நாங்கள் ஒரு பேச்சுவார்த்தையை முன் ஆயத்த ஏற்பாடுகளை நாங்கள் வரவேற்றிருந்த போதிலும், இன்று வரை அதற்கான திகதி நிர்ணயிக்கப்படாமல் ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏப்ரல் மாதம் அவர்களின் தடைக்காலம் வரும் வரை அதாவது ஏப்ரலில் இருந்து ஜூன் வரைக்கும் அவர்களின் அந்த தடைக்காலத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் காலத்தை இழுத்தடித்து, அந்த காலம் வரையும் அவர்கள் எமது கடலில் மீன்பிடிக்க கூடியவாறு, அதேபோன்று எமது மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாடுகளும், அவர்களின் மீன்பிடி வலைகள் ஏனைய உபகரணங்களை சேதமாக்குகின்ற செயற்பாடுகளும் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கிறது.

மீனவர்கள் தங்களின் நிலையை வெளிப்படுத்தியும், அதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் அல்லது எந்தவிதமான இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படாத சூழ்நிலைதான் இப்போது காணப்படுகிறது. எனவே இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை அரசு மெத்தனப் போக்கோடு செயல்படுகின்றது என்பதும் தெளிவாக எங்களுக்கு தெரிகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய அரசு தமிழக அரசாக இருக்கட்டும் அல்லது மத்தியிலே இருக்கின்ற இந்திய அரசாக இருக்கட்டும் அவர்களின் நிலைப்பாடு எமது கடற்பரப்பில் மீன்பிடிக்க கூடியவாறு தங்கள் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக அண்மையில் கூட பலவிதமான ஆசை வார்த்தைகளும், அதேபோன்று சில நிவாரணங்களை மேலதிகமாக கூட்டி கொடுத்து பல விடயங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

தமிழக அரசுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. இந்த தொழில் முறையை மாற்றக் கூடிய வகையில் அங்கு சட்டம் இருக்கின்றது.

70 சதவீதமான நிதியை மானியமாகவும், 20 சதவீதமான நிதியை இலவசமாகவும் வழங்கி அந்த மீனவர்களை மாற்றுத் தொழிலுக்கு உருவாக்க வேண்டும் என்று அவர்களாகவே உருவாக்கிக்கொண்ட செயற்பாடுகள் அங்கு நடைமுறையில் இருந்தாலும் கூட, அதனை ஊக்கவிக்காமல் இந்த ட்ரோலர் முறையையும் இந்த இழுவைமடி தொழிலையும் ஊக்குவிக்கின்ற வகையிலே, கைது செய்யப்படுகின்ற மீனவர்களுக்கும் அதேபோன்று தொழிலை இழக்கின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வருவாய் இழப்பீட்டை கொடுத்து வருகிறார்கள்.

எனவே தமிழக அரசு நிர்வாக கட்டமைப்பில் கூறப்பட்டவாறு அந்த நடவடிக்கையை மேற்கொண்டால், இருதரப்பு மீனவர்களுக்குமான ஒரு சுமூகமான நிலை எட்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். இதற்கப்பால், இன்று மாவட்டம் மாவட்டமாக பல்வேறுபட்ட மீன்பிடி முறைகளால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டு இருக்கின்ற மீன்பிடி முறைகள் தாராளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கப்பால் மீன்பிடி ஒழுங்குபடுத்தல் அதாவது அனுமதிக்கப்பட்டும் ஒழுங்குபடுத்தாத வகையில் மீன்பிடி நடைமுறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதனை ஒழுங்குபடுத்தினால் கூட, அந்த மீனவர்கள் அந்த தொழிலில் உள்வாங்கப்படும் போது அல்லது நடைமுறையை அவர்கள் பின்பற்றி செய்யக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக நாங்கள் எடுத்துக் கொண்டால், இப்போது மன்னார் மாவட்டத்தில் பரவலாக பேசப்பட்டுகின்ற சுருக்குவலை தொடர்பாக, இந்த சுருக்கு வலை தொடர்பாக ஏற்கனவே 2024 காலப்பகுதிக்கு முற்பட்ட காலத்தில் மன்னாரில் 74 மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் 2025 இல் அது 45 ஆக குறைக்கப்பட்டு, 2026 இல் அது 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது சுருக்குவலை என்பது தடுக்கப்பட்ட ஒரு தொழில்முறை.

எனவே அந்த தொழில்முறையை ஓரளவு முன்னே காலங்களில் தொடர்ந்து செய்கின்றவர்களை மாற்றக்கூடிய வகையில், காலத்துக்கு காலம் அந்த எண்ணிக்கையை குறைத்து ஒரு காலத்தில் அதை இல்லாமலாக்கும் செயற்பாட்டில் அரசு முனைப்பாக செயல்படுவது வரவேற்கப்பட்டிருந்தாலும், இன்று அரசு அந்த செயற்பாட்டிலே மீனவர்களைக் கொண்டு ஒரு மோதலை உருவாக்கக்கூடிய அல்லது மீனவர்களுக்கு ஒரு தெளிவற்ற தன்மையை உருவாக்கி, அந்த தொழில் முறையை செய்து கொண்டிருப்பவர்களும் அதற்காக விண்ணப்பித்தவர்களையும் அலக்கழிக்கின்ற செயற்பாட்டை நாங்கள் பார்க்கின்றோம்.

மன்னாரில் கடந்த மாதம் நடைபெற்ற மீனவர் அபிவிருத்திக் கூட்டத்தில் இது தொடர்பாக மீனவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு, அமைச்சரும் ஒரு வார காலத்திற்குள் அதற்கான தீர்வை தான் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் ஒரு மாதம் கடந்த நிலையிலும் கூட இன்று வரை அது செயற்பாட்டிற்கு வரவில்லை. எனவே மீனவர்கள் அந்த விடயத்திலே சற்று குழப்பமடைந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

81 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0