உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மர்மமான முறையில் உ**யிரிழந்த இளம் குடும்பஸ்தர்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
106 பார்வைகள்

பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில்,
நேற்று (30) பிற்பகல் தனது கணவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, பின்னர் வீட்டுக்கு அருகில் வந்து தம்முடன் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் இரவு அவர் வீட்டுக்கு திரும்பி வராத நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் வீழ்ந்து கிடந்ததை அவதானித்ததாக மனைவி அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்திருந்தார் என கூறியுள்ளார்.

இது மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட மோதலினால் இடம்பெற்ற கொலையா அல்லது வீதியில் வீழ்ந்து கிடந்தபோது விபத்தினால் ஏற்பட்ட மரணமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலன்னறுவை பொலிஸின் பல குழுக்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0