உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதல்; இரு இளைஞர்கள் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
80 பார்வைகள்

கொழும்பு 10, மாளிகாவத்த பகுதியில் இரு இளைஞர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

மாளிகாவத்தை பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றுக்கு அருகில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் இரு தரப்பினருக்கு இடையே காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்து கத்திக்குத்துத் தாக்குதலாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவருடன் இளைஞரொருவர் காதல் உறவில் இருந்துள்ளார்.

குறித்த யுவதி வேறு சில இளைஞர்களுடனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறு மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

குறித்த இளைஞர்கள் குழுவொன்று அவரது காதலர்களில் ஒருவரைத் தாக்கியதாகவும், இதன்போது தாக்குதலுக்குள்ளான இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது மூவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 21 சேர்ந்த முகமது அப்துல்லா மற்றும் முகமது ரெய்ஹான் ஆகிய இரு இளைஞர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 16 வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் ஒருவர், ஏற்பட்ட தகராறைத் தீர்த்து வைப்பதற்காகச் சென்றிருந்த நிலையில் சந்தேகநபரின் கத்திக்குத்துக்கு இலக்கானதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0