ஒருநாள் போட்டி தரவரிசை : 2ஆவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்திய போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக விராட் கோலி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
எனினும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதன்படி, ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.