உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட் பதிவு இன்று முதல் ஆரம்பம்

32 பார்வைகள்

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாக்குப்பதிவு முறையிலான (Ballot) பதிவு இன்று (1) ஆரம்பமாகிறது.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள Zeitz MOCAA அருங்காட்சியகத்தில், உலகக் கிண்ணத் தொடரின் அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை வெளியிடப்படும் நிகழ்வுடன் இந்த டிக்கெட் பதிவு நடைமுறையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் 14ஆவது பதிப்பு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய மூன்று நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மூன்று நாடுகளிலும் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்ய முடியும்.

இந்த வாக்குப்பதிவு முறையில் பதிவு செய்வது இலவசம் என்பதுடன், முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது.

ஒக்டோபர் 1 முதல் நவம்பர் 21 ஆம் திகதி வரை பெறப்படும் அனைத்து செல்லுபடியாகும் பதிவுகளும் சமமாகக் கருதப்படும்.

ரசிகர்கள் தாங்கள் விரும்பும் எத்தனை போட்டிகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்சம் நான்கு டிக்கெட்டுகள் வரை கோர முடியும். அதேவேளை, விரும்பிய டிக்கெட் வகையையும் தெரிவு செய்யலாம்.

ஒரு போட்டிக்கான டிக்கெட்டுகளின் கேள்வி, கிடைக்கும் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால், தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய சீரற்ற வாக்குப்பதிவு முறை பயன்படுத்தப்படும்.

வாக்குப்பதிவில் பங்கேற்பதற்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. டிக்கெட் வாங்குவதற்கு தெரிவாகும் ரசிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

ஒரு போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு அதிகமான கேள்வி இல்லாத நிலையில், பதிவு செய்த ரசிகர்களுக்கு டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மீதமுள்ள டிக்கெட்டுகள் பின்னர் நடைபெறும் விற்பனை கட்டங்களில் வெளியிடப்படலாம்.

எனினும், வாக்குப்பதிவில் பதிவு செய்வது டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

2027 உலகக் கிண்ணத் தொடரில் 14 அணிகள், 12 மைதானங்களில் மொத்தம் 57 போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகள் அமுல்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில முக்கிய விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.துடுப்பாட்டவீரர்கள் ஆட்ட நேரத்தை தேவையின்றி வீணடித்தால் கடுமையான நடவடிக்கைகள்…

73 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஷிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறவுள்ள இந்தத்…

75 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் போட்டி தரவரிசை : 2ஆவது இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய…

98 0 0