மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தின் மீது நபர் ஒருவர் தாக்குதல்!
மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி இன்று (30) பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது பேசாலை பகுதியில் வைத்து நபர் ஒருவர் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது.
எதற்காக குறித்த பேருந்தின் மீது தாக்குதலை மேற் கொண்டார் என்ற விடையம் தெரியவில்லை.
குறித்த தாக்குதலில் பேருந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.