உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற சம்பவம் – மண்டபம் முகாமில் ஆணையர் ஆய்வு!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
98 பார்வைகள்

மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக இலங்கை தமிழர் மறுவாழ்வு ஆணையர் சதீஷ் இன்று புதன்கிழமை மாலை (30) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களை சந்தித்த ஆணையர் சதீஷ், அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களில் சிலர், மீண்டும் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.

மேலும், முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் ஆணையரை நேரில் சந்தித்து ஆதார் வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.முகாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வீடுகளில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், ஆதார் அட்டை இல்லாததால் மாணவர்களை ப் பாடசாலைகளில் சேர்ப்பதிலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதிலும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், நீண்ட காலமாக முகாமில் பதிவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு சிறப்பு தணிக்கை, விடுமுறை பெறுவதில் விலக்கு அளிக்க வேண்டும், முகாமில் சீரான மின் விநியோகம் செய்ய வேண்டும், மின் பணியாளரை நிரந்தரமாக அமைக்க வேண்டும், நுழைவாயில் இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இதனிடையே, இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை பெறப்பட்டு, அது தொடர்பாக விசாரணை நடத்தப் பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.

முகாமில் நடைபெற்று வரும் அனைத்து நலத்திட்ட பணிகள் மற்றும் புதிய வீடுகள் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0