உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ@தைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
89 பார்வைகள்

சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நாடு முழுவதும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் 1818 என்ற இலக்கத்திற்கு அழைத்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வழங்க முடியும்.

தகவல் வழங்குபவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் முழுமையாக இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பது இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

ஜனாதிபதி செயலகத்தில் இயங்கும் “நாடு முழுவதும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டு பேரவையின் நேரடி மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, போதைப்பொருள் வர்த்தகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் எந்த நேரத்திலும் 1818 என்ற இலக்கத்திற்கு அழைத்து பாதுகாப்பாக தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0